Skip to main content
பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு - 12 ஆண்டுகளில் முதன்முறையாகச் சீனா கலந்துகொள்ளவில்லை

வாசிப்புநேரம் -
அமெரிக்கா விதிக்கும் வர்த்தக வரி சட்டவிரோதமானது, அது உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் அபாயம் இருக்கிறது என்று பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டின் நகல் தீர்மானம் கூறுகிறது.

BRICS உச்சநிலை மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இன்றிரவு தொடங்குகிறது. மாநாடு இன்றும் நாளையும் நடைபெறும்.

மேற்கத்திய நாடுகளின் கூட்டணிக்குப் போட்டியாக BRICS தொடங்கப்பட்டது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 2009இல் முதல் கூட்டத்தை நடத்தின. பிறகு தென்னாப்பிரிக்கா சேர்ந்தது.

கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு ஆகியவை சேர்ந்தன.

12 ஆண்டில் முதன்முறையாகச் சீன அதிபர் சி சின் பிங் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ஏன் என்பது தெரியவில்லை.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் செல்லவில்லை.

சீனா சார்பாகப் பிரதமரும், ரஷ்யா சார்பில் வெளியுறவு அமைச்சரும் கலந்துகொள்கின்றனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்