Skip to main content
பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக் போட்டிச் சின்னங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக் போட்டிச் சின்னங்கள் - முன்கூட்டியே வெளியாகின

வாசிப்புநேரம் -
பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக் போட்டிச் சின்னங்கள் - முன்கூட்டியே வெளியாகின

படம்: REUTERS/Denis Balibouse

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Oct 2026 12:49PM புதுப்பிப்பு : 04 Oct 2026 02:08PM
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் (Brisbane) நகரில் 2032ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான சின்னங்கள் திட்டமிட்டதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே தவறுதலாக வெளியாகிவிட்டன.

போட்டிகளின் அதிகாரபூர்வ YouTube பக்கத்தில் சின்னங்களை விளக்கும் காணொளி முன்கூட்டியே பதிவேற்றப்பட்டது.

கோக்கட்டூ (Cockatoo) பறவையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சின்னங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

தவறு நடந்துவிட்டதால் திட்டத்தை மாற்றிக்கொண்ட ஏற்பாட்டுக் குழு, சின்னங்களைப் பிறகு அதிகாரபூர்வமாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டது.

சின்னங்கள் வெளியிடப்பட்டதை எண்ணி உற்சாகம் கொள்வதாகப் போட்டிக்கான தலைமை விளம்பர அதிகாரி கூறினார்.

பொதுமக்கள் சின்னங்களுக்குப் பெரும் ஆதரவு வழங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
 
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்