Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்துவரத் தடை விதிக்கவிருக்கிறது பிரிட்டன்"

வாசிப்புநேரம் -
பிரிட்டனில் பயிலும் பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள், குடும்பத்தாரை நாட்டிற்குள் அழைத்துவரத் தடை விதிக்கப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

அந்த மாற்றம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடப்புக்கு வரும்.

வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என்று பலரும் கோரிவரும் வேளையில் அந்த அறிவிப்பு வந்துள்ளது.

தற்போதுள்ள ஆய்வுத் திட்டங்களின் கீழ் வராத முதுகலைப் பட்டம் பயிலும் மாணவர்களை இலக்காகக் கொண்டது புதிய மாற்றம்.

அத்துடன் வெளிநாட்டு மாணவர்கள் கல்வியை முடித்த பின்னரே பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

முதுகலைக் கல்வியை மேற்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்கள் தற்போது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விசா பெறமுடியும்.

ஆனால் எதிர்வரும் ஜனவரி முதல் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படமாட்டாது.

ஆய்வுக் கல்வியில் ஈடுபடும் மாணவர்கள் மட்டுமே படிப்புக்கான காலம் முடியும் வரை குடும்பத்தாரை அழைத்து வர அனுமதிக்கப்படுவர்.

சென்ற ஆண்டு பிரிட்டனுக்குள் நுழைய வெளிநாட்டு
மாணவர்களின் கணவன், மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட
136 ஆயிரம் பேருக்கு விசா வழங்கப்பட்டது.

இந்த எண்ணிக்கை 2019இல் கொடுக்கப்பட்டதை விட 8 மடங்கிற்கும் அதிகம்.

வெளிநாட்டு் மாணவர்களால் பொருளியலுக்கு ஆண்டுதோறும் 51 பில்லியன் டாலர் கிடைப்பதாக உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் அமைப்பான Universities UK கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்