வன்முறை ஆர்ப்பாட்டங்களை அறவே ஏற்க முடியாது: பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர்
வாசிப்புநேரம் -
(படம்: JUSTIN TALLIS / AFP)
பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஷாபனா மஹ்மூட் (Shabana Mahmood), 18 வயது ஹென்ரி நோவாக்கின் (Henry Nowak) மரணம் தொடர்பாக நடக்கும் வன்முறை ஆர்ப்பாட்டங்களை அறவே ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
வெள்ளையரான நோவாக்கை ஒரு சீக்கியர் கத்தியால் குத்திக் காயப்படுத்தினார்.
நோவாக் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது பிரிட்டிஷ் காவல்துறையினர் அவரது கையில் விலங்கு மாட்டும் காணொளி பரவியது.
நோவாக், இனத்தைச் சொல்லித் திட்டியதாக சீக்கியக் கொலையாளி சொன்ன பொய்யைக் காவல்துறையினர் நம்பிவிட்டனர்.
நோவாக் மாண்டார். கொலையாளியான 23 வயது விக்ரம் டிக்வாவிற்கு (Vickrum Digwa) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் பிரிட்டிஷ் காவல்துறை, சிறுபான்மையினருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்று சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

ஆதாரம் : Reuters