ஹோர்முஸ் நீரிணை முடக்கம் - "பிரிட்டன் உதவாது"
(கோப்புப் படம்: Oli SCARFF / AFP)
This audio is generated by an AI tool.
பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) எவ்வளவு நெருக்கடி அளிக்கப்பட்டாலும் ஈரான் போரில் பிரிட்டன் தலையிடாது என்று தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் அமெரிக்காவின் திட்டத்திற்கும் பிரிட்டன் துணைபோகாது என்று அவர் கூறினார்.
நீரிணை முழுமையாகத் திறக்கப்பட வேண்டும்; அதை நோக்கியே பிரிட்டனின் முயற்சிகள் அனைத்தும் உள்ளன என்றார் திரு ஸ்டார்மர்.
நீரிணையில் செல்லும் எல்லாக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை மடக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 10 மணி முதல் முற்றுகை நடப்புக்கு வரும் என்று அமெரிக்க மத்தியத் தளபத்தியம் குறிப்பிட்டது.
அது சட்டவிரோதச் செயல் என்றும் கடற்கொள்ளைக்குச் சமம் என்றும் ஈரானிய ராணுவம் கூறியது.
ஈரானிய துறைமுகங்கள் அச்சுறுத்தப்பட்டால், மத்திய கிழக்கில் எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என்று அது எச்சரித்தது.