Skip to main content
பிரிட்டிஷ் விமானத்தை மின்னல் தாக்கியது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டிஷ் விமானத்தை மின்னல் தாக்கியது

வாசிப்புநேரம் -
பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானம் மின்னலால் தாக்கப்பட்டது.

அந்த அதிர்ச்சியூட்டும் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது.

அந்தச் சம்பவம் நடந்தபோது விமானம் பிரேசிலின் சாவ் பாவ்லோ குவாருல்ஹொஸ் (Sao Paulo Guarulhos) அனைத்துலக விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அந்த விமானத்தில் செல்ல காத்திருந்த பயணி ஒருவர் அந்தக் காணொளியைப் பதிவு செய்தார்.

மின்னலடித்த பின் மழை வெளுத்து வாங்கியது.

அதனால் விமானங்கள் ஏதும் புறப்படவில்லை.

மின்னல் விமானத்தின் வாலைத் தாக்கியது.

அதன் பிறகு விமானம் புறப்படுவதற்குமுன் சோதனை செய்யப்பட்டது.

6 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு விமானம் புறப்பட்டது.

தேசிய வானிலைச் சேவை தந்த தகவலின்படி விமானங்கள் மின்னலால் ஆண்டுக்குச் சராசரியாக ஒரு முறை அல்லது இரண்டு முறை தாக்கப்படுகின்றன.

மேலும் விமானங்கள் மின்னலைத் தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்