"அமெரிக்காவும் பிரிட்டனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்"
(படம்: Henry Nicholls / AFP)
This audio is generated by an AI tool.
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் (Charles) அமெரிக்காவும் பிரிட்டனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அவர் அமெரிக்காவுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
மக்களவை, செனட்சபை இரண்டு அவைகளின் கூட்டத்தில் மன்னர் சார்ல்ஸ் இன்று காலை உரையாற்றினார்.
அண்மையில் வாஷிங்டன் ஹில்ட்டன் ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றிக் குறிப்பிட்ட அவர், வன்முறை வெல்வதில்லை என்றார்.
இதற்குமுன் 1991இல் அவரது அன்னை இரண்டாம் எலிசபெத் அரசியார் அதே இருஅவையில் ஆற்றிய உரையை மன்னர் சார்ல்ஸ் நினைவுகூர்ந்தார்.
இப்போது உலகம் சந்திக்கும் சவாலை எந்த ஒரு நாடும் தனித்துச் சமாளிக்க முடியாது என்று அவர் சொன்னார்.
முன்பு எப்போதையும்விட அமெரிக்க-பிரிட்டிஷ் நட்பு இப்போது முக்கியம் என்றார் அவர்.
பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகமான பிபிசி அவரது உரையை வெகுவாகப் பாராட்டியது.
தமது உரையின் முடிவில் மன்னர் சார்ல்ஸ், அமெரிக்கா உதிர்க்கும் சொற்களை உலகம் கவனிக்கிறது, அதற்கு அர்த்தமும் பொறுப்பும் உண்டு என்றார்.