பிரிட்டிஷ் மன்னரின் அமெரிக்கப் பயணம் தொடரும்
(கோப்புப் படம்: Kirsty Wigglesworth / POOL / AFP)
This audio is generated by an AI tool.
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸின் (Charles) அமெரிக்கப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
நேற்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கலந்துகொண்ட வெள்ளை மாளிகை விருந்து நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்தது.
திரு டிரம்ப் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதை அடுத்து மன்னர் சார்ல்ஸின் அமெரிக்கப் பயணம் குறித்து பாதுகாப்பு அக்கறைகள் எழுந்தன.
மன்னர் சார்ல்ஸ், அவரது துணைவியார் கமில்லா (Camilla) ஆகிய இருவரும் இன்று அமெரிக்காவுக்குச் செல்கின்றனர்.
அவர்கள் 4 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வர்.
பயணத்தின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.