Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பள்ளத்தாக்கில் விழுந்த சுற்றுப்பயணியை விரைந்து காப்பாற்றிய இந்தியக் காவல்துறை

வாசிப்புநேரம் -
பள்ளத்தாக்கில் விழுந்த சுற்றுப்பயணியை விரைந்து காப்பாற்றிய இந்தியக் காவல்துறை

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

இந்தியாவின் லடாக் (Ladakh) பகுதிக்கு அருகில் இருக்கும் கார்கில் (Kargil) நகரில் பள்ளத்தாக்குக்குள் விழுந்த பிரிட்டிஷ் சுற்றுப்பயணியைக் காவல்துறையினர் விரைவாக மீட்டெடுத்தனர்.

கார்கிலில் இருக்கும் பார்காச்சிக் (Parkachik) பனியோடைக்கு 55 வயது ஹாரி டொமினிக் வைட்ஹெட் (Harry Dominic Whitehead) சென்றிருந்தார். அங்கு அவர் தவறுதலாகப் பள்ளத்தாக்கினுள் விழுந்தார். உதவித் தொலைபேசி எண் 112ஐ அழைத்து உதவி நாடினார் அவர்.

உதவிக்குழு காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தந்தது. காவல்துறையினரும் தொண்டூழியர்களும் துரிதமாகச் செயல்பட்டு கடுமையாக முயற்சி செய்து காயமுற்ற ஹாரியை மீட்டெடுத்தனர்.

தம்மைத் தக்க சமயத்தில் காப்பாற்றிய காவல்துறையினரை ஹாரி பாராட்டினார். இந்தியாவின் அவசரகால, நெருக்கடி முறையை மெச்சி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

லடாக் காவல்துறை பலமுறை பனியில் மாட்டிக்கொண்ட சுற்றுப்பயணிகளை மீட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்