Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணத்தில் இரு வெவ்வேறு நாடுகளுக்கு விளையாடும் சகோதரர்கள்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணத்தில் இரு வெவ்வேறு நாடுகளுக்கு விளையாடும் சகோதரர்கள்

(படம்: Ina Fassbender / AFP)

இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள்... இருவருமே உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் விளையாடுகின்றனர்.

ஆனால் வெவ்வேறு நாடுகளுக்கு...

20 வயது நிக்கோ வில்லியம்ஸ் (Nico Williams) ஸ்பெயினுக்கு விளையாடுகிறார்.

28 வயது இனாகி வில்லியம்ஸ் (Iñaki Williams) கானாவிற்கு விளையாடுகிறார்.

இருவரும் ஸ்பெயினில் பிறந்தவர்கள்.

கானாவைச் சேர்ந்த அவர்களின் பெற்றோர் ஸ்பெயினுக்குப்  புலம்பெயர்ந்ததாக First Post செய்தி நிறுவனம் கூறியது.

தற்போது நடைபெற்று வரும் போட்டியில் கானாவுடன் பொருத விரும்புவதாக நிக்கோ AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அவர்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் வரலாற்றிலேயே வெவ்வேறு நாடுகளைப் பிரதிநிதித்து விளையாடும் 2ஆவது சகோதரர்கள்.

2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் ஜெரமியும் (Jerome) கெவின்-பிரின்ஸ் போதெங்கும் (Kevin-Prince Boateng) விளையாடியதாக First Post தெரிவித்தது.

ஜெரமி ஜெர்மனிக்கும் போதெங் கானாவிற்கும் விளையாடினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்