Skip to main content
BTS பாடகர்கள் தேசியச் சேவையை முடித்துவிட்டனர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

BTS பாடகர்கள் தேசியச் சேவையை முடித்துவிட்டனர்

வாசிப்புநேரம் -
பிரபலத் தென்கொரிய இசைக்குழு BTSஐச் சேர்ந்த இருவர் தேசியச் சேவையை முடித்துவிட்டனர். தேசியச் சேவைக்குப் பின் குழு உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணையப் போகின்றனர். அதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

V, RM ஆகியோர் இன்று தேசியச் சேவையை முடித்தனர். ராணுவத் தளத்தில் அவர்களுக்காகப் பல ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் வெளியேறிய பிறகு ரசிகர்கள் அவர்களுக்காக ஆரவாரத்துடன் கைதட்டினர்.

ரசிகர்களின் ஆதரவுக்கு V, RM இருவரும் நன்றி தெரிவித்தனர்.

விரைவில் குழு ஒன்றுசேரப்போவதாக அவர்கள் கூறினர். இவர்களுக்கு முன் Jin, J-Hope ஆகியோரும் தேசியச் சேவையை முடித்தனர். மேலும் மூவர் இவ்வாண்டு தேசியச் சேவையை முடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்