"பிரேக் பிடிக்கவில்லை" - மலேசியாவில் 15 மாணவர்கள் மாண்ட விபத்தில் மன்னிப்புக் கேட்ட பேருந்து ஓட்டுநர்
வாசிப்புநேரம் -
படம்: Facebook/Universiti Pendidikan Sultan Idris
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மலேசியாவின் பேராக் (Perak) மாநிலத்தில் 15 மாணவர்கள் மாண்ட விபத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
விபத்துக்குப் பிரேக் எனும் வேகக் கட்டுப்பாட்டு விசை செயலிழந்ததே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
திரெங்கானுவிலிருந்து புறப்படும்போது பேருந்து நல்ல நிலையில் இருந்தது என்றும் கெரிக்கிலுள்ள (Gerik) பாலம் ஒன்றை நெருங்கியபோது 'பிரேக்' செயலிழந்ததாகவும் அமிருல் ஃபடில் ஸுல்கிப்லி (Amirul Fadhil Zulkifle) எனும் அந்த 39 வயது ஓட்டுநர் சொன்னார்.
"என்னால் ஆன அனைத்தையும் செய்தேன். ஆனால் 'பிரேக்' பிடிக்கவில்லை. "handbrake" எனும் கையால் எடுத்துவிடும் வேகக் கட்டுப்பாட்டு விசையும் இயங்கவில்லை. பேருந்தின் வேகத்தையும் கட்டுப்படுத்த இயலவில்லை" என்று அவர் சொன்னதாக Harian Metro செய்தி கூறியது.
'பிரேக்' செயலிழந்து விட்ட தகவலை உடனடியாக மாணவர்களிடம் தாம் கத்தித் தெரியப்படுத்தியதாகவும் அந்த ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
பேருந்தின் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த மாணவர்கள் தாம் கூறியதைக் கேட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்; ஆனால் பின்னிருக்கைகளில் இருந்தவர்களில் பலர் உறங்கிக்கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.
இந்நிலையில் விபத்துக்கான காரணத்தைக் கண்டறியப் பேருந்து மீது மிகத் தீவிரமான தடயவியல் சோதனை நடத்த வேண்டும் என்று MY Mobility Vision எனும் மலேசியப் போக்குவரத்து ஆய்வுக்கழகம் கூறியிருக்கிறது.

ஆதாரம் : Others