உலகம் trending
பேருந்துக்குள் விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Reddit/Ashish_ank
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பேருந்து மீது மோதி பேருந்துக்குள்ளேயே விழுந்துவிட்டார்.
கடந்த ஞாயிற்றுகிழமை (ஆகஸ்ட் 30) கொலம்பியாவில் (Colombia) பூகா (Buga) நகரில் சம்பவம் நடந்தது.
நிறுத்தக்கோட்டைப் பாராமல் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்தார் அந்த ஓட்டுநர்.
அந்த நேரம் பார்த்து ஒரு பேருந்து குறுக்கே வந்தது.
பேருந்தை எதிர்பாராத மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் உடனே நிறுத்தமுடியவில்லை.
பேருந்தில் பலமாக மோதினார்.
அந்த நேரத்தில் பேருந்தின் கதவு திறந்திருந்தது.
மோதிய வேகத்தில் அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து பேருந்தின் கதவு வழி சென்று உள்ளே விழுந்தார்.
சம்பவத்தைக் கண்காணிப்புக் கேமரா பதிவு செய்தது.
அவர் வெளியே வந்து தடுமாற்றத்துடன் நடந்து செல்வதைக் காணொளியில் பார்க்க முடிகிறது.
அவருக்குப் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்று ஊடகத் தளங்கள் தெரிவித்தன.
"பேருந்துக்குள் இப்படியும் நுழையலாமா?" என்று ஓர் இணையவாசி பரிகசித்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi