Skip to main content
ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்" - தடை செய்கிறது இங்கிலாந்து...சில உணவுகளுக்கு

வாசிப்புநேரம் -
ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்" - தடை செய்கிறது இங்கிலாந்து...சில உணவுகளுக்கு

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

"ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்" போன்ற சலுகைகளைக் கடைகளில் நாம் பார்ப்பதுண்டு...

இங்கிலாந்தில் பெரிய கடைகளுக்கும் பேரங்காடிகளுக்கும் அந்தச் சலுகை கொடுப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்தகைய சலுகைகளை ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு கொடுக்கக்கூடாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தில் பெரியவர்களில் கால்வாசியினரும்
தொடக்கப்பள்ளி மாணவர்களில் 20 விழுக்காட்டினரும் பருமனாக உள்ளனர்.

பிள்ளைகளிடையே உடற்பருமனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக BBC ஊடகம் சொன்னது.

ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

அவை அடுத்த ஜனவரி மாதம் நடப்புக்கு வருவதாக BBC சொன்னது.

இரவு 9 மணிக்கு முன் தொலைக்காட்சியில்  அத்தகைய உணவுகளுக்கு விளம்பரங்கள் இடம்பெறக்கூடாது.

ஆரோக்கியமற்ற உணவுகளை இணையத்தில் விளம்பரப்படுத்தவும் தடை விதிக்கப்படும். 

புதிய கட்டுப்பாடுகளால் கடைக்காரர்கள் ஆரோக்கியமான உணவுகளை விளம்பரம் செய்ய முயற்சி எடுப்பார்கள் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆதாரம் : Others/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்