Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கம்பிவண்டியில் கோளாறு... அந்தரத்தில் தத்தளித்த 104 சுற்றுப்பயணிகள்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவின் லன்சோவ் (Lanzhou) நகரிலிருக்கும் பனிச்சறுக்கு உல்லாசத்தலத்தில் அசம்பாவிதம்.

அங்கு பயன்படுத்தப்படும் கம்பிவண்டி திடீரென்று நின்றுவிட்டது.

திடீர் மின்சாரத் தடை அதற்கான காரணம்.

இளம் பிள்ளைகள் உட்பட கம்பிவண்டியில் 104 பயணிகள் இருந்தனர்.

20 நிமிடங்களில் மின்சாரத் தடை சீராக்கப்பட்டது. ஆனால் கம்பிவண்டியின் இயந்திரம் நின்றுவிட்டது.

எங்கும் செல்லமுடியாமல் பயணிகள் தவித்தனர்.

சென்ற சனிக்கிழமை (ஜனவரி 17) சம்பவம் நடந்தது.

தாமும் நண்பர்களும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சிக்கியிருந்ததாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் சீன ஊடகங்களிடம் கூறினார்.

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பாளர்கள் பயணிகள் சிலரை மீட்டனர்.

அதேவேளை சீரமைப்புப் பணியும் தொடர்ந்தது. கடைசியாக அனைத்து கோளாறுகளும் சரிசெய்யப்பட்டன.

ஆனால் வெப்பநிலை குறைந்துகொண்டே இருந்ததால் வண்டியில் சிக்கியிருந்த பயணிகள் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தனர்.

குளிரைத் தாங்க முடியாத பிள்ளைகள் சிலர் மயங்கி விழுந்ததாகச் சீன ஊடகங்கள் தெரிவித்தன.

அந்தரத்தில் சிக்கித்தவித்த ஒவ்வொரு பயணிக்கும் முறையே 7,000 சீன யுவான் (சுமார் 1,300 வெள்ளி) இழப்பீடு வழங்கவிருப்பதாகப் பனிச்சறுக்குத் தல நிர்வாகம் கூறியது.

ஆதாரம் : Others/8world

மேலும் செய்திகள் கட்டுரைகள்