Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகவேண்டும்!'

வாசிப்புநேரம் -
'பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகவேண்டும்!'

Daniel LEAL / AFP

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), மீண்டும் அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்.

அவர் பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் பதவி விலகப்போவதில்லை என்று அவர் உறுதியாகக் கூறியிருக்கிறார்.

அவரது அமைச்சரவையைச் சேர்ந்த திரு. ரிஷி சுனாக் (Rishi Sunak), திரு. சாஜித் ஜாவித் (Sajid Javid) இருவரும் அமைச்சர்-பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மேலும் பல பழைமைவாத நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலகியிருக்கின்றனர்.

ஆட்சி நடத்தத் திரு. ஜான்சன் தகுதியற்றவர் என்று அவர்கள் கூறினர்.

அண்மைக்காலத்தில் அவருக்கு எதிராகப் பல புகார்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

பாலியல் ஒழுங்கீனம் தொடர்பான விவகாரத்தில் சிக்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் பின்ச்சருக்குப் (Chris Pincher) பதவி உயர்வு கொடுத்ததற்காக அவர் குறைகூறப்பட்டார்.  

பதவி உயர்வு கொடுத்ததற்காகப் பிரதமர் ஜான்சன் பின்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்