"அது எங்கள் பாரம்பரியம் அல்ல" - மணப்பெண்ணோடு தந்தை நடந்து வருவடைத் தடை செய்யக் கோரிக்கை

Unsplash/insung yoon
கல்யாண மேடைக்குத் திருமணப் பெண்ணோடு தந்தை நடந்து வருவதைத் தடை செய்யும்படி சுவீடனில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்வது தங்களுடைய பாரம்பரியம் அல்ல என்று சிலர் கூறுகின்றனர்.
அந்தப் பழக்கம் பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றில் பின்பற்றப்படுகிறது.
சுவீடன் வழக்கப்படி மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து மணமேடைக்கு நடந்து செல்வது வழக்கம் என்று The Guardian செய்தி நிறுவனம் கூறியது.
ஆனால் அண்மை ஆண்டுகளில் அதிகமான சுவீடன் பெண்கள் தங்களுடைய தந்தை தம்மை மாப்பிளையிடம் கரம்பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.
சமூக ஊடகங்கள், படங்கள் ஆகியவை அந்தப் போக்கை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சுவீடன் பெண்ணியத்தை மதிக்கும் நாடாகக் கருதப்படுகிறது.
தந்தை மணப்பெண்ணை கரம்பிடித்து கொடுப்பது ஆண் ஆதிக்கத்தைப் பிரதிபலிப்பதாய்க் கூறப்பட்டது.
அந்தப் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர அதனைத் தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.