Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கம்போடிய அரசியல்வாதியின் கொலையாளிக்குத் தாய்லந்தில் ஆயுள் தண்டனை

வாசிப்புநேரம் -
கம்போடிய எதிர்த்தரப்பு அரசியல்வாதியின் கொலையாளிக்கு இன்று தாய்லந்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

திரு லிம் கிம்யா (Lim Kimya) தாய்லந்தைச் சேர்ந்த எக்கலாக் பேனோயால் (Ekkalak Paenoi) தாய்லந்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பேங்காக்கிற்குத் திரு லிம் அவருடைய மனைவியுடன் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது சம்பவம் நடந்தது.

அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஹுன் சென் திரு லிம்மின் கொலையைத் திட்டமிட்டதாகக் கம்போடிய எதிர்த்தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எக்கலாக் கம்போடியாவில் பிடிபட்டார். பின்னர் அவர் காணொளியின் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மூன்று நாள்களுக்கு முன்னர்தான் வழக்குத் தொடங்கியது.

திரு லிம்மின் மனைவி தீர்ப்பு திருப்தியளிக்கிறது என்று சொன்னதாக அவருடைய வழக்கறிஞர் கூறினார். எனினும், சதி செய்தவர்கள் இன்னும் பிடிபடவில்லை என்று அவர் கருதுவதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

திரு. ஹுன் சென்னின் மகனான தற்போதைய கம்போடியப் பிரதமர் ஹுன் மனேட் தம் தந்தை கொலையைத் திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார்.

திரு ஹுன் சென் 2023ஆம் ஆண்டுவரை கம்போடியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்