Skip to main content
தோளின் ஒரு பக்கத்தில் மட்டும் பையைச் சுமப்பதால்...விளைவு?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தோளின் ஒரு பக்கத்தில் மட்டும் பையைச் சுமப்பதால்...விளைவு?

வாசிப்புநேரம் -
தோளின் ஒரு பக்கத்தில் மட்டும் பையைச் சுமப்பதால்...விளைவு?
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தினமும் தோளின் ஒரு பக்கத்தில் மட்டும் பையைச் சுமந்து கொண்டு நடக்கிறீர்களா?

அது நாளடைவில் நம் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறு செய்வதால் என்ன நடக்கிறது?

உடலின் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்திக் கழுத்து, தோள்பட்டை, முதுகுவலிக்கு வழிவகுக்கிறது என்று எலும்பு மருத்துவ நிபுணர் எச்சரித்துள்ளார்.

ஒரே தோளில் பையைச் சுமக்கும்போது, உடல் சமநிலையை இழக்கிறது.

ஒரு தோள் மட்டும் உயரும்போது, உடல் ஒரு பக்கமாக அதிகம் சாய்வதாக நிபுணர் தெரிவித்தார்.

இதனால் தசைகளில் சோர்வு ஏற்படலாம்.
கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் வலி ஏற்படலாம்.

முதுகின் மேற்பகுதியில் இறுக்கம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாகக் கனமான பள்ளிப் பைகளைச் சுமக்கும் மாணவர்கள், மடிக்கணினிப் பைகளைச் சுமக்கும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படலாம்.

இருப்பினும், ஒரே தோளில் பையைச் சுமப்பதால் உடனடியாக முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது என்று கூறப்பட்டது.

பைகளின் எடை, அதை எவ்வளவு நேரத்திற்குத் தூக்குகிறோம், உடல் அமைப்பு ஆகியவை பொறுத்து முதுகுத்தண்டு பிரச்சினைகள் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

பாதிப்புகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

பையின் எடையைக் குறைக்கலாம்.

இரு தோள்களிலும் பையைத் தூக்கலாம்.

அவ்வப்போது பையை தோள்களில் மாற்றி மாற்றித் தூக்கலாம்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்