Skip to main content
பிளாஸ்டிக்கிலிருந்து எரிபொருள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிளாஸ்டிக்கிலிருந்து எரிபொருள் - சாத்தியமா?

வாசிப்புநேரம் -
உலகில் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்த வரிசையில் மெக்சிகோவில் ஒரு புது முயற்சி.

அங்குள்ள Petgas எனும் நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருளை உற்பத்தி செய்கிறது.

அதற்காக Boca del Rio துறைமுக நகரில் Petgas ஓர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. அது பைரோலிசிஸ் (pyrolisis) என்ற வெப்ப இயக்கவியல் செயல்முறையைப் பயன்படுத்துகிறது. உயிர்வாயு இல்லாத நிலையில் ஒரு பொருளை அது சூடாக்க உதவுகிறது.

நிறைய பிளாஸ்டிக் வகைகளுக்கு மூலப்பொருளாக hydrocarbon இருக்கிறது. பிளாஸ்டிக்கின் மீது வெப்ப இயக்கவியல் செயல்முறையைப் பயன்படுத்தும்போது அது பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பாரஃபின் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.

இயந்திரம் 1.5 டன் எடை பிளாஸ்டிக் கழிவுகள் வாயிலாக 1,350 லிட்டர் எரிபொருளை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது என்றும் நிறுவனம் சொன்னது.

மறுபயனீடு செய்யமுடியாத Styrofoam பிளாஸ்டிக் கழிவுகளைக்கூடப் பயன்படுத்த முடியும் என நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரி கூறுகிறார்.

ஓர் உற்பத்தியைச் செய்துமுடிக்க 4 மணி நேரம் தேவைப்படுகிறது.
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்