Skip to main content
சேமிப்பைப் பயன்படுத்தினால் எண்ணெய் விலை குறையுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சேமிப்பைப் பயன்படுத்தினால் எண்ணெய் விலை குறையுமா?

வாசிப்புநேரம் -
சேமிப்பைப் பயன்படுத்தினால் எண்ணெய் விலை குறையுமா?
படம்: REUTERS/Ken Cedeno
வெளியீடு : 11 Mar 2026 08:00AM புதுப்பிப்பு : 11 Mar 2026 11:02AM

ஈரான் போரால் எண்ணெய் விலை அதிகரிக்கிறது.

எண்ணெய் இருப்பைப் பயன்படுத்தினால் விலையைச் சமாளிக்கமுடியுமா?

இருப்பில் எவ்வளவு இருக்கிறது?

அவசரத் தேவைக்குப் பயன்படுத்தக் குறைந்தது 1.2 பில்லியன் பீப்பாய் எண்ணெயை 32 நாடுகள் சேகரித்து வைத்திருக்கின்றன.

இதுவரை அந்த இருப்பு 5 முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டது:

- 1991: வளைகுடா போர்
- 2005: கத்ரினா (Katrina), ரீட்டா (Rita) சூறாவளிகள்
- 2011: லிப்யாவில் உள்நாட்டுப் போர்
- 2022: உக்ரேன் போர் (இரு முறை பயன்படுத்தப்பட்டது)

அமெரிக்காவில்தான் ஆகப் பெரிய எண்ணெய் இருப்பு இருக்கிறது.

அங்கு தற்போது 415 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உள்ளது.

சீனாவில் சுமார் 1.4 பில்லியன் பீப்பாய் இருப்பதாக நம்பப்படுகிறது.

நெருக்கடியைத் தவிர்க்க முடியுமா?

இருப்பிலிருந்து ஒரு நாளுக்கு அதிகபட்சம் 4.4 மில்லியன் பீப்பாய் எண்ணெயை மட்டும் பயன்படுத்த முடியும்.

வளைகுடா வட்டாரத்திலிருந்து நாளுக்கு 11 மில்லியன் முதல் 16 மில்லியன் பீப்பாய்வரை எண்ணெய் கிடைக்கிறது.

ஒரு நாளுக்கான தேவையை இருப்பு பூர்த்தி செய்யுமா என்பது கேள்விக்குறிதான்.

அதனால் எண்ணெய் பற்றாக்குறையில் ஏற்படும் நெருக்கடியைத் தவிர்க்கமுடியுமா என்பதும் தெரியவில்லை.

ஆதாரம் : Bloomberg

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்