Skip to main content
அமெரிக்கப் பொருள்களுக்கு இன்று முதல் 25% வரி விதிக்கும் கனடா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கப் பொருள்களுக்கு இன்று முதல் 25% வரி விதிக்கும் கனடா

வாசிப்புநேரம் -
கனடா அமெரிக்காமீது பதில் நடவடிக்கையாக வரிவிதிப்பை அறிவித்திருக்கிறது.

எஃகு, அலுமினியம், கணினி உள்ளிட்ட 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்கள்மீது கனடா 25% வரி விதித்திருக்கிறது.

அது இன்றிலிருந்து நடப்பிற்கு வருகிறது.

கனடாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் திரு. மார்க் கார்னி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் நேரடியாகப் பேசத் தயார் என்று கூறியிருக்கிறார்.

கூடுதலான பொருளாதார இழுபறியைத் தவிர்க்கப் புதிய வர்த்தக உடன்பாட்டை எட்டுவது பற்றி பேசவும் அவர் முன்வந்துள்ளார்.

அமெரிக்காவிற்கு எஃகுப் பொருள்களை ஆக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு கனடா.

வாஷிங்டன் அதன் பெரும்பாலான அலுமினியப் பொருள்களைக் கனடாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது.

அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், சீனா ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா அலுமினியப் பொருள்களைப் பெறுகிறது.

உலகின் மற்ற பகுதிகளிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் அலுமினியப் பொருள்களின் மொத்த மதிப்பு சென்ற ஆண்டு 7 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்