Skip to main content
கரடித் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கரடித் தாக்குதல் - தாயும் மகளும் மரணம்

வாசிப்புநேரம் -
கரடித் தாக்குதல் - தாயும் மகளும் மரணம்

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கனடாவின் மேற்குப் பகுதியில் மலையேறும் பாதைக்கு அருகே ஒரு தாயும் மகளும் மாண்டுகிடந்தனர்.

இருவரும் கரடியால் தாக்கப்பட்டு மாண்டதுபோல் தெரிவதாக அதிகாரிகள் கூறினர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

இருவரும் வீட்டிற்கு அருகே நடக்கச் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்தன.

ஒருவர் திங்கட்கிழமையும் (2 நவம்பர்) இன்னொருவர் மறுநாளும் (3 நவம்பர்) கண்டுபிடிக்கப்பட்டனர்.

சம்பவத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கரடிகள் காரணமா என்பது தெரியவில்லை.

சம்பவத்தில் தொடர்புடையதாகக் கண்டறியப்படும் எந்தக் கரடியும் கொல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியில் பள்ளி மாணவர்கள் கரடியால் தாக்கப்பட்டனர்.

பிள்ளைகள் உட்பட 11 பேர் காயமுற்றனர்.

ஆண்டின் இந்தப் பகுதியில் கரடிகள் கடுமையாக நடந்துகொள்ளலாம்.

குளிர்கால உறக்கநிலைக்குச் (Winter Hibernation) செல்வதற்கு முன்பு கரடிகள் தங்களுடைய உடலில் கொழுப்புச் சேமிப்பை அதிகரித்துக்கொள்ள முயல்வது வழக்கம்.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்