உலகம் exclusive
இந்தியா-கனடா பூசல்: "இருநாடுகளும் விரைந்து பதற்றத்தைச் சரிசெய்ய வேண்டும்"- கனடாவில் வசிக்கும் இந்தியர்கள்
கோப்புப் படம்: AFP
கனடியச் சீக்கியச் சமயத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் (Hardeep Singh Nijjar) கொலை விவகாரத்தால் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அரசதந்திர ரீதியிலான சச்சரவு நிலவுகிறது.
கனடாவைப் பொறுத்தவரை அங்குள்ள இந்திய சமூகத்தினரின் இயல்பு வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் வசிக்கும் குடும்பத்தினர் அந்தச் சூழ்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கனடாவில் மேற்படிப்பு படிக்கத் திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள், அங்கு செல்வதற்கு இது சரியான நேரமா என்ற குழப்பத்தில் இருப்பதாக சிலர் தெரிவித்தனர்.
கனடா கல்வி விசா வைத்திருக்கும் மாணவர்களின் பெற்றோர், பின்விளைவுகள் குறித்து பதற்றத்துடன் தகவல் கேட்பதாக Times Of India நாளேடு குறிப்பிட்டது.
கனடியப் பல்கலைக்கழகங்களில் 320,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்வதாக The Guardian செய்தி நிறுவனம் கூறுகிறது.
கசந்துவரும் உறவுகளால் இருநாடுகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதனால் முன்கூட்டியே பயணத் திட்டங்களை நிறைவேற்றப் பலரும் விரும்புகின்றனர்.
அது இருநாடுகளுக்கும் இடையே உள்ள வான்வழிப் பயணக் கட்டணங்களை அதிகரித்துள்ளது.
இந்தியாவும் கனடாவும் விரைந்து செயல்பட்டு இந்த பதற்றத்தை சரி செய்ய வேண்டும் என்பதே கனடா, அமெரிக்கா இரு நாடுகளிலும் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரின் மனநிலையாக உள்ளது.
பூசல் குறித்து அமெரிக்காவும் கருத்துத் தெரிவித்துள்ளது.
விவரங்கள் காணொளியில்…