கனடாவில் தைப்பூசக் கொண்டாட்டம்!
This audio is generated by an AI tool.
தைப்பூசத் திருவிழா பொதுவாகச் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.
ஆனால் ஆசிய நாடுகளைத் தாண்டி வேறொரு நாட்டிலும் தைப்பூசக் கொண்டாட்டத்தில் மக்கள் திளைத்தனர்.
கனடாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் ஒன்றான ஸ்கார்பரோவில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோயிலில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கடவுள் வழிபாடுகளைத் தவிர்த்து, குழந்தைகளுக்குத் தாய்மொழியான தமிழ் மொழியை அறிமுகம் செய்யும் தினமாகவும் தைப்பூசத் திருவிழா காணப்படுகிறது.
அதற்கான நிகழ்ச்சிகளும் கோயிலில் நடைபெற்றன.
அது "ஏடு தொடக்கல்" என்று அழைக்கப்படுகிறது.
கனடாவில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும் விதம் வேறாக இருக்கலாம்.
புலம்பெயர்ந்த மண்ணிலும் தங்கள் வேர்களைத் தொலைத்துவிடக்கூடாது என்பதில் கனடியத் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்.