Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடியப் பிரதமர் - டிரம்ப் சந்திப்பு

வாசிப்புநேரம் -
கனடியப் பிரதமர் - டிரம்ப் சந்திப்பு

(படம்: CHARLY TRIBALLEAU and Ludovic MARIN / AFP)

கனடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கும் திரு டோனல் டிரம்பைச் சந்தித்துள்ளார்.

கனடியப் பொருள்கள்மீது வரி விதிக்கப்படும் என்று திரு டிரம்ப் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து திரு ட்ரூடோ புளோரிடா மாநிலத்தில் உள்ள திரு டிரம்ப்பின் Mar-a-Lago வீட்டுக்குச் சென்றார்.

கனடா, மெக்சிக்கோ ஆகியவற்றின் எல்லைகளில் குடியேறிகள், போதைப்பொருள்கள் வருவது குறையாவிட்டால் அனைத்துப் பொருள்களுக்கும் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று திரு டிரம்ப் கூறியிருந்தார்.

கனடா அமெரிக்காவைப் பெரிதும் நம்பியிருக்கிறது.

அதன் எண்ணெயில் சுமார் 80 விழுக்காடும், எரிவாயுப் பொருள்களில் சுமார் 40 விழுக்காடும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்