Skip to main content
"சொகுசுக்கப்பலுக்கு அனுமதி கிடையாது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"சொகுசுக்கப்பலுக்கு அனுமதி கிடையாது" - கனரி தீவுகளின் அதிபர்

வாசிப்புநேரம் -
கனரி தீவுகளின் அதிபர் ஃபெர்னண்டோ கிளாவிஜோ (Fernando Clavijo), ஹண்ட்டாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சொகுசுக்கப்பலைத் தீவில் அனுமதிக்க மறுத்துள்ளார்.

BBC செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

அர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்ட அந்தச் சொகுசுக்கப்பல் கனரி தீவுகளுக்குச் செல்ல ஸ்பெயினின் அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.

அது குறித்த மேல்விவரங்கள் வழங்கப்படவில்லை என்று திரு கிளாவிஜோ கூறினார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸை (Pedro Sánchez) அவசரமாகச் சந்திக்கப்போவதாகவும் அவர் சொன்னார்.

அடுத்த சில நாள்களில் அந்தச் சொகுசுக்கப்பல் கனரி தீவுகளைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த MV Hondius சொகுசுக்கப்பலில் மனிதர்களுக்கிடையே ஹண்ட்டாவைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது மிகவும் அரிது.

கப்பலிலிருந்து பாதிக்கப்பட்ட மூவர் சிகிச்சைக்காக வெளியேற்றப்படுவர் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

மூவரின் உடல்நலமும் நிலையாக இருப்பதாக அது சொன்னது.

சனிக்கிழமை (மே 2) முதல் அந்தக் கப்பல் அனைத்துலகச் சுகாதார அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

கப்பலில் இருந்த 3 பயணிகள் மாண்டனர். அவர்கள் ஹண்ட்டாவைரஸால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சுவிட்சர்லந்தின் ஸூரிக் நகரில் ஹண்ட்டாவைரஸால் பாதிக்கப்பட்ட கப்பல் பயணி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்