Skip to main content
மெக்சிகோ காற்பந்தாட்டக் கொண்டாட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மெக்சிகோ காற்பந்தாட்டக் கொண்டாட்டம் - கார் மோதி 17 பேர் காயம்

வாசிப்புநேரம் -
மெக்சிகோ காற்பந்தாட்டக் கொண்டாட்டம் - கார் மோதி 17 பேர் காயம்

படம்: Ayuntamiento de Los Cabos/Facebook/Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

FIFA உலகக் கிண்ணப் போட்டியின் knockout சுற்றுக்கு மெக்சிகோ தகுதிபெற்றதைக் கொண்டாட திரண்ட மக்கள் மீது கார் ஒன்று மோதியது.

17 பேர் காயமடைந்தனர்.

நேற்று முன்தினம் மெக்சிகோ செக் குடியரசை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மெக்சிகோ அணியின் ஜெர்சிகளை அணிந்தபடி காபோ சென் லுக்கஸ் (Cabo San Lucas)  நகரில் மக்கள்  சாலைகளில் திரண்டு கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் புகுந்த கார் ஒன்று சுற்றியுள்ளவர்களை இடித்துத் தள்ளிவிட்டு சாலை ஓரம் இருந்த தடுப்பின் மீது மோதியது.

சம்பவத்தைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் பரவி வருகின்றன.

அதில் மக்கள் அந்தக் கருப்பு நிறக் காரை சூழ்ந்துக்கொண்டு அதனைக் குலுக்குவதைக் காண முடிந்தது.

திடீரென்று காரின் ஓட்டுநர் வேகமாய் முன்னோக்கி நகர்கிறார். காரின் முன் நின்றவர்கள் மீது மோதுகிறார்.

அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பலரும் சாலையில் அடிபட்டுக் கிடப்பது காணொளிகளில் பதிவாகியிருந்தது.

காரை ஓட்டிய நபர் கைதுசெய்யப்பட்டார்.

சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த லாஸ் காபோஸ் (Los Cabos) வட்டார மேயர் விசாரணை நிறைவுபெற்றதும் முழு விவரங்கள் பொதுமக்களுடன் பகிரப்படும் என்றார்.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்