உலகம் trending
வானில் கரணம் அடித்த கார்...
மலேசியாவில் கோலாலம்பூர், சிரம்பான் ஆகிய நகரங்களை இணைக்கும் விரைவுச்சாலையில் அதிர்ச்சியூட்டும் விபத்து நடந்துள்ளது.
கார் ஒன்று நடுவானில் பறந்து விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.
விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பம் சிக்கியது. குடும்ப உறுப்பினர் ஒருவர் காருக்கு ஏற்பட்ட சேதத்தைக் காணொளியாக எடுத்து TikTok தளத்தில் பதிவிட்டார்.
வேறொரு கார் அதன் தடத்துக்குள் வேகமாகப் புகுந்தது; அதை இடிக்காமல் இருக்கக் காரைத் திருப்பியபோது லாரி ஒன்றின் மீது மோதியதாக அவர் பதிவில் குறிப்பிட்டார்.
பிறகு சாலைத் தடுப்பின் மீது மோதியதால் கார் வானில் பறந்தது.
நடுவானில் கார் தலைகீழாகத் திரும்பி சாலையில் விழுவது காணொளியில் தெரிந்தது.
"நல்ல வேளையாகச் சிறு காயங்களுடன் உயிர்தப்பினோம்," என்று அவர் தெரிவித்தார்.