Skip to main content
சுவையா? சித்திரவதையா? பிரபல உணவகத்தின் இருண்ட பக்கம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

சுவையா? சித்திரவதையா? பிரபல உணவகத்தின் இருண்ட பக்கம்!

வாசிப்புநேரம் -
சுவையா? சித்திரவதையா? பிரபல உணவகத்தின் இருண்ட பக்கம்!
envato elements
உலகின் மிகச்சிறந்த உணவகங்களில் ஒன்றான 'நோமா' (Noma) சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பிரமாண்டத்திற்குப் பின்னால் ஊழியர்களின் கண்ணீரும் ரத்தமும் கலந்திருப்பதாக எழுந்துள்ள புகார்கள் சமையல் உலகையே அதிரச் செய்துள்ளன.

3 மிச்செலின் நட்சத்திரங்களைப் (Michelin-star) பெற்ற 'நோமா' உணவகத்தின் நிறுவனரான சமையல் நிபுணர் ரெனே ரெட்செபி (René Redzepi) தமது ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கியதாகவும் இழிவுபடுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 35 முன்னாள் ஊழியர்கள் ரெட்செபியின் தவறான போக்கை உறுதி செய்ததாக நியூயார்க் டைம்ஸ் (New York Times) நாளேடு குறிப்பிட்டது.

"வேலைக்குச் செல்வது ஏதோ போருக்குச் செல்வது போலத் தோன்றும். எதையும் எதிர்கொள்ளும் வலிமையோடு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று முன்னாள் ஊழியரான அலெசியா (Alessia) பகிர்ந்தார்.

2014-ல், ஒரு Sous-chef சமையலறையில் டெக்னோ (Techno) இசையை ஒலிக்கச் செய்தார்.

அது ரெட்செபிக்கு பிடிக்காத இசை.

ஆத்திரமடைந்த அவர் ஒட்டுமொத்தப் பணியாளர்களையும் குளிரில் வெளியே நிற்க வைத்தார்.

அனைவர் முன்னிலையிலும் அந்த ஊழியரை அலற அலற உதைத்து, மிகவும் இழிவான வார்த்தைகளைச் சொல்லச் சொல்லி அவரைப் பொதுவெளியில் அவமானப்படுத்தினார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்