Skip to main content
மாறிவரும் தேவைகள்... திறன்கள்... ஊழியர்களுக்கு உதவுவது எப்படி?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மாறிவரும் தேவைகள்... திறன்கள்... ஊழியர்களுக்கு உதவுவது எப்படி?

வாசிப்புநேரம் -
உலகப் பொருளியலின் மாறிவரும் தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் பொருத்தமான திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று மனித வள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) கூறியுள்ளார்.

தென்கிழக்காசிய நாடுகள் அதனை உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர்.

புதிய வேலைகளை உருவாக்க நவீனத் துறைகளில் ஈடுபட வேண்டும்; உற்பத்தித்திறனை உயர்த்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் டான் வட்டார நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

ஆசியான் தொழிலாளர் அமைச்சர்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்று அவர் பேசினார்.

எவரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் டாக்டர் டான்.

வேலைப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல், ஊழியர்களுக்கு உதவுதல் முதலியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

அதே கூட்டத்தில் பேசிய ஆசியானின் தலைமைச் செயலாளர் காவ் கிம் ஹோர்ன் (Kao Kim Hourn) வட்டாரம் பெரிய அளவில் உருமாறி வருவதாகச் சொன்னார்.

தொழில்நுட்ப முன்னேற்றம், பொருளியல் மாற்றங்கள், மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களில் மாற்றம் முதலியவற்றை அவர் சுட்டினார்.

ஊழியர்களைப் பாதுகாத்து அவர்களைக் காலத்துக்கேற்பத் தயாராய் வைத்திருப்பது முக்கியம் என்றார் டாக்டர் காவ்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்