புதுடில்லி ரயில் நிலைய நெரிசல் - மாண்டோர் எண்ணிக்கை 18க்குக் கூடியது
வாசிப்புநேரம் -

(படம்: AP)
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18க்குக் கூடியுள்ளது.
மாண்டவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள், பெண்கள்.
விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடக்கிறது. அதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கனோர் சென்று திரும்புகின்றனர்.
ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இரண்டு ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டதால் சில தளமேடைகளில் கூட்டம் அதிகமாய் இருந்தது.
ஒரு தளமேடையிலிருந்து இன்னொன்றுக்குச் செல்லும்படி அறிவிக்கப்பட்டதும் மக்கள் முண்டியடித்துச் சென்றதாக நேரில் பார்த்த ஒருவர் சொன்னார்.
ரயில் நிலையத்தில் மக்களின் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிப்பதாக இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஆதாரம் : AFP