Skip to main content
ChatGPT
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ChatGPT-யில் விரைவில் விளம்பரங்கள்...

வாசிப்புநேரம் -
ChatGPT-யில் விரைவில் விளம்பரங்கள்...

(கோப்புப் படம்: SEBASTIEN BOZON / AFP)

வெளியீடு : 17 Jan 2026 12:29PM புதுப்பிப்பு : 17 Jan 2026 01:30PM

ChatGPT தளத்தில் வரும் வாரங்களில் விளம்பரங்கள் சோதிக்கப்படும் என்று OpenAI நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல செயற்கை நுண்ணறிவுத் தளமான ChatGPT, உயரும் செலவுகளைச் சரிக்கட்ட வருவாயை அதிகரிக்க முற்படுகிறது.

முதலில் அமெரிக்காவில் ChatGPT தளத்தை இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவோர் விளம்பரங்களைக் காண்பர்.

Premium Pro, Enterprise சந்தாக்காரர்களுக்கு விளம்பரங்கள் கிடையாது.

ChatGPT தளத்தை சுமார் ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.

அதில் சிறிய விழுக்காட்டினர் மட்டுமே சந்தாச் சேவைகளுக்குப் பணம் செலுத்துகின்றனர்.

2022ஆம் ஆண்டு OpenAI நிறுவனம் ChatGPT தளத்தை அறிமுகம் செய்தது.

அதிலிருந்து OpenAI நிறுவனத்தின் மதிப்பு 500 பில்லியன் டாலரைக் கடந்துவிட்டது.

எனினும் ChatGPT அதன் சேவைகளைத் தொடர்ந்து வழங்க சக்திவாய்ந்த கணினி இயக்கம் தேவைப்படுகிறது. 

அதற்கான செலவுகளோ எக்கச்சக்கம்.

அதனால் வருவாயை அதிகரிக்க நிறுவனம் புதிய வழிகளை நாடுகிறது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்