ChatGPT பயனீட்டாளர் 1 பில்லியன்
படம்: REUTERS/Dado Ruvic/Illustration
ChatGPT தளத்தைக் கடந்த மாதம் 1 பில்லியன் பேர் பயன்படுத்தியுள்ளனர்.
OpenAI நிறுவனத்துக்குச் சொந்தமானது ChatGPT தளம்.
அது தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளே ஆகிறது.
மிகக் குறுகிய காலக்கட்டத்தில் உலகளவில் இத்தனை பயனீட்டாளர்களை ChatGPT தளம் சம்பாதித்துள்ளது.
ஒரு பில்லியன் பேரை எட்டுவதில் Google Maps, TikTok, Instagram, YouTube உள்ளிட்டவற்றின் வேகத்தை ChatGPT மிஞ்சிவிட்டதாக Sensor Tower நிறுவனம் கூறுகிறது.
Anthropic, OpenAI ஆகிய இரண்டு செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்குள் கடும் போட்டி நிலவும் வேளையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
Anthropic நிறுவனத்தின் Claude தளத்தை உலகளவில் 56 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.
அந்தச் செயலியை இவ்வாண்டின் முதல் காலாண்டில் பதிவிறக்கம் செய்தவர்கள் ஒரு மாதத்துக்குப் பிறகு ChatGPTஇல் செலவிடும் நேரம் 5 விழுக்காடு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.