Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ChatGPT மனிதர்கள் போன்று அதிகம் செயல்படும்...GPT-4இல்...

வாசிப்புநேரம் -
ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனம், மனிதர்கள் போன்று அதிகம் செயல்படும் GPT-4 என்ற அதன் புதிய பதிப்பை (update) வெளியிட்டுள்ளது.

GPT-4இன் பதில்கள் இன்னும் துல்லியமாக இருக்கும் என்று அதை உருவாக்கிய OpenAI நிறுவனம் கூறியது.

எதிர்காலத்தில் படங்களைச் சார்ந்த பதில்களையும் எதிர்பார்க்கலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் உட்புறத்தைப் படம் எடுத்து அனுப்பினால், அது என்ன படம் என்பதைச் சரியாக அடையாளம் காண்பதோடு உள்ளிருக்கும் பொருள்களைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்பதையும் GPT-4ஆல் கூற முடியும்.

அத்தகைய அம்சத்தை உருவாக்க Be My Eyes நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக OpenAI குறிப்பிட்டது.

தகாத கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் சாத்தியம் GPT-4இல் 82 விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பதாக அது சொன்னது.

உண்மையான பதில்களை அளிக்கும் சாத்தியம் 40 விழுக்காடு கூடியுள்ளது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்