Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சென்னையில் சூறாவளி எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
சென்னையில் சூறாவளி எச்சரிக்கை

(படம்: R.Satish BABU / AFP)

சென்னையில் சூறாவளி ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதை முன்னிட்டு சில கடலோர நகரங்களுக்குச் சிவப்பு, ஆரஞ்சு நிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

சூறாவளிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

மணிக்கு 90 கிலோமீட்டர்வரை வீசக்கூடிய ஃபெங்கல் (Fengal) பெரும்புயல் இந்திய கடலோர நகரங்களைத் தாக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு உடனே மாற வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கனமழை பெய்யும் என்பதால் மீன்பிடிப் படகுகள் மீண்டும் துறைமுகங்களுக்குத் திரும்பும்படி உத்தரவிடப்பட்டது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்