Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செர்ரி பூக்கள் பூக்கும் தருணம்...அதன் அர்த்தம்?

வாசிப்புநேரம் -
செர்ரி பூக்கள் பூக்கும் தருணம்...அதன் அர்த்தம்?

(படம்: Kazuhiro NOGI / AFP)

கண்ணுக்கு விருந்தளிக்கும் செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவம் வந்துவிட்டது!

ஜப்பானில் மட்டுமல்ல...

சீனா, தென்கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் வைத்த கண் எடுக்காமல் அவற்றைக் கண்டு ரசிக்கலாம்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதிக்கட்டத்தில் அவை பூக்கத் தொடங்குகின்றன.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குள் பூக்கள் முழுமையாக மலர்ந்துவிடும். அடுத்த சில வாரங்களில் அவை உதிர்ந்துவிடும்.

ஜப்பானில் அது தேசிய மலராகக் கருதப்படுகிறது.

ஜப்பானில் செர்ரி பூக்களைச் சக்குரா ('Sakura') மலர்கள் என்றும் அழைப்பார்கள்.

செர்ரி மரங்கள் Rosaceae எனும் ரோஜா குடும்பத்தைச் சேர்ந்தவை.

குளிர்காலம் முடிந்து வசந்த காலத்தின் தொடக்கத்தை மட்டும் அது குறிப்பதில்லை.

செர்ரி மலருக்கு ஆழமான கலாசார முக்கியத்துவம் உண்டு.

அதோடு அது பற்பல வாழ்க்கைத் தத்துவங்களையும் நினைவூட்டுகின்றது.

அவற்றுள் சில:

ஜப்பானில்...

🌸மறுபிறப்பின் உன்னதத்தைக் காட்டுகின்றது.

🌸வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது என்பதையும் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

🌸புதுப்பித்தல், எதிர்கால மகிழ்ச்சி ஆகியவற்றின் சின்னமாக அவை விளங்குகின்றன.


சீனாவில்...

🌸பெண்களின் அழகுடன் ஒப்பிடப்படுகிறது.


தென்கொரியாவில்...

🌸நாட்டின் அழகைப் பிரதிபலிக்கும் சின்னமாகச் செர்ரி பூக்கள் விளங்குகின்றன.

உலகெங்கும் மக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் பூக்களைக் கண்டு ரசிக்கின்றனர்.

இதோ சில படங்கள் உங்கள் பார்வைக்கு....
(படம்: Kazuhiro NOGI / AFP)
(படம்: Kazuhiro NOGI / AFP)
(படம்:Kazuhiro NOGI / AFP)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்