Skip to main content
தாய்லந்தில் கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தாய்லந்தில் கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Nov 2026 05:57PM புதுப்பிப்பு : 04 Nov 2026 05:58PM

தாய்லந்தின் சியாங் மாய் (Chiang Mai) நகரில் உள்ள வாட் மாய் நோங் ஹோய் (Wat Mai Nong Hoi) கோவிலின் கோபுரம் திடீரென இடிந்து விழுந்தது.

நேற்று காலை டோய் லோ (Doi Lo) வட்டாரத்தில் சம்பவம் நிகழ்ந்தது.

யாரும் காயமடையவில்லை.

கோயிலின் கோபுரம் இடிந்து விழும் காணொளி இணையத்தில் பரவியது.

கோபுரம் பெருமளவு சேதமடைந்திருப்பது காணொளியில் தெரிகிறது.

உடைந்த கான்கிரீட் துண்டுகள் கோயிலைச் சுற்றிச்  சிதறிக் கிடந்தன.

அருகிலுள்ள கட்டடங்களின் பாதுகாப்புக் குறித்து கவலை எழுந்துள்ளது.

கோயிலைச் சுற்றியும், பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபுரம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆதாரம் : Bangkok Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்