Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸாவிலிருந்து சிகிச்சைக்காக இத்தாலிக்கு அனுப்பப்பட்ட பிள்ளைகள்

வாசிப்புநேரம் -
 காஸாவிலிருந்து சிகிச்சைக்காக  இத்தாலிக்கு அனுப்பப்பட்ட  பிள்ளைகள்

படம்: Facebook/Salvino Provino

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காஸாவிலிருந்து 17 பேர் நேற்றிரவு இத்தாலியின் பல்வேறு விமான நிலையங்களைச் சென்றடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகள் என்று AP செய்தி நிறுவனம் கூறியது. அவர்களுடன் 53 உறவினர்களும் சென்றனர்.

அவர்களில் குறிப்பாகக் கடந்த மே மாதம் வெடிகுண்டுத் தாக்குதலில் 9 உடன்பிறப்புகளை இழந்த ஆடம் (Adam) என்ற 11 வயதுச் சிறுவனும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாலியின் தற்காப்பு அமைச்சு, உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்தாலிய வெளியுறவு அமைச்சு அவர்களை அழைத்துச் சென்றது.

இத்தாலிய ஆகாயப் படைக்குச் சொந்தமான விமானங்களில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மிலான் (Milan), ரோம் (Rome), வெரோனா (Verona), போலோன்யா (Bologna) உள்ளிட்ட நகரங்களில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும்.
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்