Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸாவில் ஊட்டச்சத்து மருந்து வாங்க நின்ற குடும்பங்கள் மீது தாக்குதல் - 15 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
காஸாவில் ஊட்டச்சத்து மருந்து வாங்க நின்ற குடும்பங்கள் மீது தாக்குதல் - 15 பேர் மரணம்

படம்: Abdel Kareem Hana/AP

வெளியீடு : 11 Jul 2025 10:55AM புதுப்பிப்பு : 11 Jul 2025 11:25AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காஸாவில் மருத்துவமனைக்கு வெளியே வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் 15 பேர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மாண்டனர்.

அவர்கள் ஊட்டச்சத்து மருந்துகளைப் பெறுவதற்காக அங்கு காத்திருந்ததாக BBC செய்தி கூறியது.

மாண்டவர்களில் 8 பேர் சிறுவர்கள். இருவர் பெண்கள்; அவர்களில் ஒருவர் கர்ப்பிணி என்று al-Aqsa Martyrs மருத்துவமனை சொன்னது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட காணொளியையும் மருத்துவமனை வெளியிட்டதாக BBC சொன்னது.

மருத்துவமனையிலிருக்கும் அமெரிக்காவின் Project Hope எனும் மருத்துவக் குழு அத்தாக்குதல் அனைத்துலகச் சட்டத்தை மீறி இருப்பதாகக் கண்டித்தது.

ஹமாஸ் பயங்கரவாதிகளைக் குறி வைத்து தாக்கியதாகக் கூறிய இஸ்ரேலிய ராணுவம் அதில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது.

உயிரைக் காக்க மருந்து வாங்கக் காத்திருந்த குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தியது மனசாட்சிக்கு விரோதமான செயல் என்று UNICEF எனும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாடியுள்ளார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்