சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானம் திருப்பிவிடப்பட்டது

AFP Photo/Saeed KHAN
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானம் ஒன்று தைவானுக்கே திருப்பிவிடப்பட்டது.
சைனா ஏர்லைன்ஸ் (China Airlines) விமானம் தைப்பே நகரிலிருந்து புறப்பட்டபோது வழக்கத்துக்கு மாறான சமிக்ஞையைப் பெற்றிருந்ததாக LTN ஊடகம் சொன்னது.
விமானத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதை முன்னெச்சரிக்கையாகச் சோதனைக்கு அனுப்ப விமானி முடிவெடுத்தார்.
அவர் விமானத்தைத் தைவானின் காவ்சியுங் (Kaohsiung) நகருக்குத் திருப்பிவிட்டார்.
விமானத்தில் இருந்த 181 பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்றுப் பிற்பகல் சிங்கப்பூர் வந்து சேரவேண்டிய பயணிகள் இரவு சுமார் 9 மணிக்கு வந்தனர்.
அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டதாக LTN ஊடகம் தெரிவித்தது.