Skip to main content
சீனாவை நினைத்துக் கவலைப்படவில்லை என்கிறார் டிரம்ப்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சீனாவை நினைத்துக் கவலைப்படவில்லை என்கிறார் டிரம்ப்

வாசிப்புநேரம் -
சீனாவை நினைத்துக் கவலைப்படவில்லை என்கிறார் டிரம்ப்

(படம்: Alexander KAZAKOV / POOL / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவுக்கு எதிரான கூட்டணியைச் சீனா உருவாக்குவது பற்றிக் கவலையில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறுகிறார்.

சீனாவும் உலகின் பல பெரிய நாடுகளும் கொண்டுள்ள உறவை அபாயமாகக் கருதவில்லை என்று அவர் கூறினார்.

சீனாவின் தியானன்மென் (Tiananmen) சதுக்கத்தில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) முதலானோர் சீன அதிபர் சி சின்பிங்குடன் (Xi Jinping) சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்றனர்.

வார இறுதியின்போது சீன அதிபர் ரஷ்ய அதிபருடன் ஆலோசனை நடத்தினார். 20க்கும் மேற்பட்ட உடன்பாடுகளில் அவர்கள் கையெழுத்திட்டனர்.

சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து புதிய உலக ஒழுங்கை உருவாக்குவது பற்றிப் பேசின.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்