Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

உடல்நலன் கருதி இணையத்தில் தகவல் அளிப்பதை நிறுத்திய சமூக ஊடகப் பிரபலம்

வாசிப்புநேரம் -
உடல்நலன் கருதி இணையத்தில் தகவல் அளிப்பதை நிறுத்திய சமூக ஊடகப் பிரபலம்
(படம்: REUTERS/Hollie Adams/Illustration)
வெளியீடு : 23 May 2026 08:30AM புதுப்பிப்பு : 23 May 2026 10:38AM
சீனாவில் 20 மில்லியன் பேர் பின்தொடரும் சமூக ஊடகப் பிரபலம் இனி இணையத்தில் எவ்விதத் தகவலையும் வெளியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் @dalianlaoshiwangbowen எனும் பெயரில் பிரபலமானவர் வாங் போவன் (Wang Bowen).

இணையத்தில் இனி காணொளிகள் வெளியிடுவதை நிறுத்துவதாக அவர் அண்மையில் அறிவித்தார்.

கடந்த 13 ஆண்டாகத் தொடர்ந்து சமூக ஊடகத்துக்காக உள்ளடக்கத்தைத் தயாரித்தது தமது உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதித்திருப்பதாகக் கடைசியாக வெளியிட்ட காணொளியில் வாங் சொன்னார்.

மனஅழுத்தம், இதய நோய் போன்றவற்றால் அவதியுறுவதாக அவர் கூறினார்.

பெற்றோருக்கு ஒரே பிள்ளை.

உடல்நலம் இல்லாமல் தொடர்ந்து வேலைசெய்வதில் என்ன பயன் என்று அவரது தாயார் ஓருமுறை கண்ணீர்விட்டுக் கேட்டதாக வாங் பகிர்ந்துகொண்டார்.

அண்மைக் காலமாக இளம் சமூக ஊடகப் பிரபலங்கள் சிலர் வேலைப்பளுவால் திடீரென மாண்டதால் வாங்கின் அதிரடி அறிவிப்பு நாட்டுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்