சீனாவில் உணவுச் சோதனையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
வாசிப்புநேரம் -
சீனாவில் உணவு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களைச் சோதனை செய்ய தனிப்பட்ட சோதனையாளர்கள் இருக்கின்றனர்.
சாப்பிடுவதற்கு மட்டுமே மாதத்துக்கு 10,000 யுவான் (சுமார் 1,835 வெள்ளி) ஊதியம் வழங்கப்படுகிறது.
ஐஸ்கிரீம், தவ்வு, நொறுக்குத்தீனி ஆகியவற்றை அவர்கள் தினமும் கிலோகிராம் கணக்கில் சுவைத்துப்பார்க்கின்றனர்.
அதைப் பற்றி South China Morning Post நாளேடு தகவல் வெளியிட்டது.
உணவுப்பொருளில் உள்ள சிறுசிறு வித்தியாசங்களைக் கண்டறியும் நிபுணத்துவம் அவர்களிடம் உள்ளது.
உணவைச் சுவைத்த பிறகு சோதனையாளர்கள் அறிவியல் ஆய்வையும் மேற்கொள்வர். பிறகு அவர்கள் உணவின் தரத்தைப் பற்றி அறிக்கையை ஒப்படைப்பர்.
ஆனால் இது எளிதான வேலை அல்ல.
அனைவரும் அன்றாடம் சுவையில்லாத உணவைத்தான் உட்கொள்ளவேண்டும்.
உடல் எடை பெரிய அளவில் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
உடல் எடை ஒரு மாதத்தில் 10 கிலோகிராம் அதிகரித்ததாக ஒருவர் South China Morning Postஇடம் கூறினார்.
அதைச் சமாளிக்க சில நிறுவனங்கள் மற்ற வெகுமதிகளை அளிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, உடல் எடை கூடினால் வாரத்துக்கு 200 யுவான் (சுமார் 36.70 வெள்ளி) வெகுமதி வழங்கப்படுகிறது.
இன்னொருவர் உணவைக் கண்டாலே சில வேளைகளில் குமட்டல் வருவதாகக் கூறினார்.
இருப்பினும் இந்த வேலையைப் பொதுநலனுக்கான கடமையாகக் கருதுகிறார். உணவு பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த சோதனையாளர்கள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Others