உலகம் trending
"என் நண்பர்களுக்கு ஏதும் ஆனால்..." - அநீதியைத் தட்டிக்கேட்ட சிறுமி!
வாசிப்புநேரம் -
envato elements
சீனாவைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி லாங்லாங் (Langlang) எகிப்தில் (Egypt) தமது நண்பர்களுக்காகத் துணிச்சலுடன் வாதிட்ட சம்பவம் இணையத்தில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
எகிப்தில் உள்ள ஒரு குதிரையேற்றப் பள்ளியில் லாங்லாங் தமது இரு நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது குதிரையேற்றத்தில் அனுபவம் இல்லாத அந்த நண்பர்களுக்கு முரட்டுத்தனமான ஆபத்தான குதிரைகளை பயிற்றுவிப்பாளர்கள் ஒதுக்கினர்.
அந்த மூவரில் லாலாங்கிற்கு மட்டும் ஆங்கிலம் தெரியும்.
"இந்தக் குதிரைகள் பாதுகாப்பற்றவை" என்று ஆங்கிலத்தில் பயிற்றுவிப்பாளர்களிடம் முறையிட்டார் லாலாங்.
பயிற்றுவிப்பாளர்கள் அலட்சியமாக பதிலளித்தபோதும் பின்வாங்காமல் லாலாங் வாதத்தை முன்வைத்தார்.
சிறுமி விடாப்படியாகப் பேசியதை அடுத்து பயிற்றுவிப்பாளர்கள் பணிந்து குதிரைகளை மாற்ற ஒப்புக்கொண்டதாக South China Morning Post நாளேடு குறிப்பிட்டது.
நண்பர்களுக்காகப் பரிந்துபேசிய சிறுமியைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

ஆதாரம் : South China Morning Post