Chilli sauce போத்தலில் தங்கக் கட்டிகளை அனுப்பிய ஆடவர்
வாசிப்புநேரம் -
சீனாவில் மோசடி முயற்சியில் சிக்கிய ஆடவர் chilli sauce போத்தலில் தங்கக் கட்டிகளை வைத்து அதனை மோசடிக்காரருக்கு அனுப்பியுள்ளார்.
ஸாவ் (Zhao) என்பவர் முதலீடு தொடர்பான விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டார்.
அவர் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாகப் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினார்.
ஸாவ் தங்கக் கட்டிகளை அனுப்பினால் அவற்றைப் பணமாக மாற்றி முதலீடு செய்யலாம் என்று மோசடிக்காரர் அவரை நம்பவைத்தார்.
அதன்படி ஸாவ் 30 கிராம் எடையுள்ள 2 தங்கக்கட்டிகளை அனுப்ப முடிவு செய்தார்.
அந்த வேளையில் அவர் மோசடியில் சம்பந்தப்பட்டதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
காவல்துறை அதிகாரி ஸாவ்வை விசாரித்தார்.
முதலில் தம் நண்பருக்கு உணவுப் பொருளை அனுப்ப எண்ணியதாக அவர் சொன்னார்.
2 மணி நேரத்திற்குப் பின்னர் போத்தலில் தங்கம் இருப்பதாக ஸாவ் ஒப்புக்கொண்டார்.
எனினும் தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணரவில்லை. அதிகாரி நிலைமையைப் புரிய வைக்கப் பாடுபட்டார்.
செயலியில் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்யுமாறு ஸாவ்விடம் அவர் கூறினார்.
ஸாவ்வால் பணத்தை மீட்க முடியவில்லை; அவருக்கு உண்மை தெரியவந்தது.
ஸாவ் அனுப்பிய பொட்டலத்தைக் காவல்துறை கண்டுபிடித்துக் கைப்பற்றியது.
அதிகாரிகள் அதை ஸாவ்விடம் ஒப்படைத்துவிட்டு 34,000 யுவான் (சுமார் 6,200) பணத்தை மீட்டுத் தந்தனர்.
அந்தச் சம்பவம் இணையவாசிகள் பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

ஆதாரம் : South China Morning Post