Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சருடனான சந்திப்பை நிராகரித்தது சீனா

வாசிப்புநேரம் -
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சருடனான சந்திப்பை நிராகரித்தது சீனா

(கோப்புப் படம்: AP Photo/Kiichiro Sato)

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சருடனான சந்திப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பைச் சீனா நிராகரித்துள்ளது.

இந்த வாரம் இடம்பெறவிருக்கும் வருடாந்திர ஷங்ரிலா பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்கத் தற்காப்பு லாய்ட் ஆஸ்டினும் (Lloyd Austin), சீனத் தற்காப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவும் (Li Shangfu) கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

அதையொட்டி இருதரப்புச் சந்திப்பையும் நடத்தலாம் என்று அமெரிக்கா கூறியிருந்தது.

பெய்ச்சிங் ஆக்கபூர்வமான ராணுவக் கலந்துரையாடலைத் தொடர விரும்பாதபோதும் சீனாவுடன் வெளிப்படையான தொடர்புக்கான கடப்பாட்டை அது பாதிக்காது என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு சொன்னது.

முக்கியத் தலைவர்களுடன் சந்திப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்புகளைப் பத்துக்கும் மேற்பட்ட முறை சீனா மறுத்துவிட்டதாக அது கூறியது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்