Skip to main content
அமெரிக்காவுக்குப் பதிலடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவுக்குப் பதிலடி - அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் சீனா

வாசிப்புநேரம் -
அமெரிக்காவுக்குப் பதிலடி - அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் சீனா

(கோப்புப் படம்: Reuters/Mark Schiefelbein/Pool)

சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது வரிகள் விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னதாகச் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்த 10 விழுக்காட்டு வரி நடப்புக்கு வந்துள்ளது. அதற்குப் பதிலடியாக சீனா வரிகளை அறிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வரும் கச்சா எண்ணெய்க்கு 10 விழுக்காடு, நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு 15 விழுக்காடு என வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்த திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 10) அவை நடப்புக்கு வரும்.

சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள் உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறுவதாகச் சீனா கூறியது.

மெக்சிகோ, கனடா மீது 25 விழுக்காடு வரிகள் விதிக்கப்போவதாக அதிபர் டிரம்ப் முதலில் கூறியிருந்தார். அதைத் தற்போது தற்காலிகமாக ரத்துச் செய்திருக்கிறார்.

ஆனால் சீனா மீது விதித்த வரிகளை அவர் ரத்துச் செய்யவில்லை.

இவ்வாரம் அமெரிக்க அதிபரும் சீன அதிபரும் கலந்துபேசுவர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்