Skip to main content
செல்லப் பூனைக்குச் சின்ன ரயில் நிலையம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

செல்லப் பூனைக்குச் சின்ன ரயில் நிலையம்!

வாசிப்புநேரம் -
செல்லப் பூனைக்குச் சின்ன ரயில் நிலையம்!

(காணொளியிலிருந்து எடுக்கப்பட்டப் படம்: Facebook/Xing's World)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவைச் சேர்ந்த ஆடவர் செல்லப் பூனைகளுக்கான சிறிய நிலத்தடி ரயில் நிலையத்தைக் கைப்பட வடிவமைத்துள்ளார்.

ஜிங் (Xing) என்பவர் இன்னல்களைச் சமாளித்துப் படைப்பை முடிக்க 4 மாதங்கள் செலவிட்டார்.

ரயில் நிலையத்தில் பாதுகாப்புக் கதவுகள், மின்படிக்கட்டுகள் உள்ளிட்ட பல அசாத்திய அம்சங்கள் உள்ளன.

பூனைகள் ஏறி இறங்க ஏதுவாகச் சிறிய தடத்தில் ரயில் சீராக நகர்கிறது.

தற்போது திரையரங்கம், பேரங்காடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்த்து ஒரு முழு நகரத்தைக் கட்டமைத்திருக்கிறார்.

இணையவாசிகள் சிலர் அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு என்று கூறினர்.

ஜிங் திரைக்குப் பின்னால் மேற்கொண்ட முயற்சிகளைக் காணொளியாக வெளியிட்டார்.

அவரது நுட்பமான வடிவமைப்பைக் கண்டு பலரும் வியந்தனர்.

இணையவாசிகள் ஜிங்கின் காணொளியை 100 மில்லியன் முறை பார்த்திருக்கிறார்கள்.


 
ஆதாரம் : South China Morning Post

மேலும் செய்திகள் கட்டுரைகள்