Skip to main content
நாடுகளே அமைதியை நாடுங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நாடுகளே அமைதியை நாடுங்கள் - சீன அதிபர் சி

வாசிப்புநேரம் -
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 80 ஆண்டுகளை அனுசரிக்கும் வகையில் சீனா மாபெரும் ராணுவ அணிவகுப்பை நடத்தியிருக்கிறது.

தலைநகர் பெய்ச்சிங்கில் அணிவகுப்பு நடந்தது.

அதிபர் சி சின்பிங் (Xi Jinping) போரை முடிவுக்குக் கொண்டுவரப் போராடிய சீன வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

நாடுகளுக்கு இடையே சமத்துவமும் ஆதரவும் இருப்பது முக்கியம்;
அவையே மோதல்கள் நிகழாமல் தடுக்க உதவும் என்று அதிபர் சி கூறினார்.

உலகம் போருக்குப் பதிலாக அமைதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சீன அதிபர் வலியுறுத்தினார்.

அமைதியான முறையில் வளர்ச்சியில் கவனம் செலுத்த சீனா கடப்பாடு கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இன்றைய அணிவகுப்பில் அதிவேக ஏவுகணைகள் முதல் அதிநவீனப் போர் விமானங்கள் வரை பலதரப்பட்ட ஆயுதங்களைச் சீனா அறிமுகம் செய்தது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

திரு புட்டினும் திரு கிம்மும் அதிபர் சியுடன் பொது இடத்தில் ஒன்றாகத் தோன்றுவது இதுவே முதல் முறை.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்